பெண் எம்பியின் இடுப்பில் கை வைத்தாரா எடியூரப்பா?: வீடியோ வெளியாகி பரபரப்பு 
செய்திகள்

பெண் எம்பியின் இடுப்பில் கை வைத்தாரா எடியூரப்பா?: வீடியோ வெளியாகி பரபரப்பு

கே.ஆர்.எஸ். அணையில் பாகினா பூஜையின் போது எடியூரப்பா நடிகை சுமலதா எம்.பி.யின் இடுப்பில் தொட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது.

மாலை மலர்

பெங்களூரு :

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்) அணை உள்ளது. இந்த நிலையில் இந்த அணை நிரம்பியதை தொடர்ந்து கடந்த 21-ந் தேதி கிருஷ்ணராஜசாகர் அணையில் எடியூரப்பா சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். பின்னர் பாகினா சமர்ப்பணம் செய்து கொண்டு இருந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில் எடியூரப்பாவின் அருகில் மண்டியா தொகுதி சுயேச்சை எம்.பி.யும், நடிகையுமான சுமலதா வந்தார். பின்னர் 2 பேரும் சிறிது நேரம் ஏதோ பேசி கொண்டு இருந்தனர். அப்போது எடியூரப்பா, சுமலதா எம்.பி.யின் இடுப்பில் தொட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் எடியூரப்பாவை பார்த்து சுமலதா ஏதோ கூற அவர் உடனடியாக கையை எடுத்து விட்டார். தற்போது இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. ஆனால் இந்த சம்பவம் குறித்து இதுவரை எடியூரப்பாவோ, சுமலதா எம்.பி.யோ கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.