வாலிபால் விளையாடும் டோனி 
செய்திகள்

ராணுவ வீரர்களுடன் வாலிபால் விளையாடிய டோனி -வீடியோ வைரல்

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் டோனி, ராணுவ வீரர்களுடன் இணைந்து வாலிபால் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

மாலை மலர்

நியூசிலாந்திற்கு எதிரான உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்ததிலிருந்து டோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள் தீவிரமடைந்தன.

இதையடுத்து ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்தவுடன், டோனியின் எதிர்கால திட்டங்கள் குறித்த தெளிவான தகவல்கள் கிடைக்கும் என கூறப்பட்டு வந்தது.

டோனி, பிராந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமென்ட்டில் கவுரவ  லெப்டினன்ட் கர்னல் ஆவார். இந்நிலையில் வரும் 31ம் தேதி முதல் ஆகஸ்ட் 15ம் தேதி வரை காஷ்மீரில் ராணுவ குழுவினருடன் டோனி ரோந்து பணிக்கு செல்ல இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி டோனி காஷ்மீரில் வீரர்களுடன் ராணுவ ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ராணுவ வீரர்களுடன் இணைந்து டோனி, வாலிபால் விளையாடும் வீடியோவை டோனியின் ரசிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.