இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரரான டோனி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் கூறியதாவது:
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் ஜீனியஸ் நிச்சயம் டோனிதான். நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணியை வெற்றிப் பெற வைத்திருப்பார்.
நாம் அனைவரும் அதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிறந்த வீரராக இல்லை என்றால், அவர் என்ன செய்கிறார் என நீங்கள் சந்தேகப்பட்டிருக்க மாட்டீர்கள். மிடில் ஆர்டரில் அவர் இருக்கும் வரை அனைவருக்கும் விளையாட வாய்ப்பளிக்கிறார்.
டோனி இல்லை என்றால் பல போட்டிகளில் இந்திய அணி வென்றிருக்க வாய்ப்பே இல்லை. ஒருநாள் போட்டிகளில் சேசிங்கில் மற்றவர்களைவிட அவர் சிறப்பாகவே விளையாடி இருக்கிறார். விராட் கோலியின் கேப்டன்சியிலும் எந்த தவறும் இல்லை.
அதேபோல் நியூசிலாந்து அணியும் சிறப்பாக விளையாடியது. கேன் வில்லியம்சனும், ராய் டெய்லரும்தான் அந்த அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.