செய்திகள்

தாராபுரம் அருகே கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் பலி

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கள்ளக்காதலியுடன் வி‌ஷம் குடித்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள காளிபாளையம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (25) மூட்டை தூக்கும் கூலி தொழிலாளி.

இவரும் அதே பகுதியை சேர்ந்த துர்காதேவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் அஜித் குமாருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிமேகலைக்கும் (38) கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இது அஜித்குமார் மனைவி துர்கா தேவிக்கு தெரிய வந்தது.

அவர் கணவரை பல முறை கண்டித்துள்ளார். ஆனாலும் அவர் கள்ளக்காதலை கைவிடவில்லை. இந்த நிலையில் அஜித்குமாரும், மணிமேகலையும் வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அஜித்குமார் பரிதாபமாக இறந்தார்.

மணிமேகலை கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்த நிலையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் இரவு பணியில் இருந்த டாக்டர் பணி முடிந்து இன்று காலை சென்றார்.

இன்று காலை பணிக்கு வர வேண்டிய டாக்டர் வரவில்லை. இதனால் மணிமேகலைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை என கூறி அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

இதனால் பரபரப்பு உருவானது. போலீசார் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். கள்ளக்காதலியுடன் வாலிபர் வி‌ஷம் குடித்து பலியான சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.