தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணா நகரில் வசித்து வருபவர் பொன்னுசாமி (63). அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. இவரது மனைவி சத்யபாமா (45). இவர் கடந்த 16-ந்தேதி முதல் மாயமானார். அவரை உறவினர்கள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து பொன்னுசாமி தாராபுரம் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மனைவியை காணவில்லை எனவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து அவரை கண்டுபிடித்து தர வேண்டும் என குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் சத்யபாமா குடும்ப பிரச்சனை காரணமாக எங்காவது சென்று விட்டாரா? அல்லது வேறு பிரச்சனை காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி மாயமான சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.