செய்திகள்

தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

தளவாய்புரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 2-வது நாளாக இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ளது தளவாய்புரம். இங்கு ஆயிரத்துக்கும் மேற் பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன.

இந்த கூடங்களில் சேலை, வேஷ்டி, லுங்கி போன்றவை தயாரிக் கப்பட்டு வருகின்றன. இந்தப்பணிகள் மூலம் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.

இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய உயர்வு தொடர்பாக ஒப்பந்தம் போடப்படும். கடந்த முறை போடப்பட்ட ஒப்பந்தம், ஜூன் மாதத் துடன் முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்கங்கள் முயற்சி களை மேற்கொண்டன.

இதில் தீர்வு எதுவும் ஏற்படாத நிலையில் ஊதிய உயர்வு போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

இந்தப் போராட்டத்தால் விசைத்தறியில் துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள் ளது. பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளது.