இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 265 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது வங்காள தேசம். சுழற்பந்து வீச்சுக்கு அதிக அளவில் ஆடுகளம் ஒத்துழைத்த நிலையில் வார்னர், ரென்ஷா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
வார்னர் தொடக்க முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் எப்போதும் நிலைத்து நின்று விளையாடும் ரென்ஷா 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கவாஜா 1 ரன்னில் வெளியேறினார். இதனால் 28 ரன்கள் எடுப்பதற்குள் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு வார்னர் உடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார்.
ஒருபுறம் ஸ்மித் நிதானமாக விளையாட மறுபுறம் வார்னர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். வார்னர் ஆட்டத்தால் ஆஸ்திரேலியா 14.1 ஒவரில் 50 ரன்னைத் தொட்டது. வார்னர் 64 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
இருவரும் நம்பிக்கையாக விளையாட ஆஸ்திரேலியா 26 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இருவரும் இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். ஆஸ்திரேலியா 3-வது நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்துள்ளது. வார்னர் 75 ரன்னுடனும், ஸ்மித் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னும் இரண்டு நாட்கள் மீதமுள்ளது. ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 156 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்டுக்கள் உள்ளன. இன்றைய 3-வது நாளிலேயே பந்து அதிக அளவில் டர்ன் ஆவதோடு, அதிக அளவில் பவுன்ஸரும் ஆகிறது.
நாளைய 4-நாள் ஆடுகளத்தில் அதிகமாக டர்ன் மற்றும் பவுன்ஸர் இருக்கும். இதனால் பந்தை எதிர்கொள்வது கடினம். தற்போது வார்னர் 75 ரன்னுடனும், ஸ்மித் 25 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
நாளைய ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 150 ரன்கள் எடுப்பதற்குள் வார்னர், ஸ்மித் விக்கெட்டுக்களை இழந்துவிட்டால் வங்காள தேசத்திற்கு அதிக அளவில் வாய்ப்புள்ளது. மாறாக 200 ரன்கள் வரை இருவரும் நிலைத்து நின்றுவிட்டால், ஆஸ்திரேலியா வெற்றி பெற வாய்ப்புள்ளது.