டிஜிபி திரிபாதி 
செய்திகள்

காவலர் வீர வணக்க நாள்- டிஜிபி திரிபாதி மரியாதை

காவலர் வீரவணக்க நாளான இன்று அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன் டிஜிபி திரிபாதி மரியாதை செலுத்தினார்.

சென்னை:

நாட்டைப் பாதுகாப்பதற்காக, வீரதீரச் செயல்களில் ஈடுபட்டு உயிர்த் தியாகம் செய்த காவலர்களின் நினைவைப் போற்றும் வகையில் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

காவலர் வீரவணக்க நாளான இன்று டிஜிபி அலுவலகத்தில் உள்ள நினைவு சின்னத்தின் முன் டிஜிபி திரிபாதி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வாலும் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

நீத்தார் நினைவு தினத்தையொட்டி அரியலூர், நாகை உள்பட தமிழகம் முழுவதும் காவல் துறையினர் மரியாதை செலுத்தினர்.

SCROLL FOR NEXT