மரணம் 
செய்திகள்

சமயநல்லூர் அருகே கண்மாயில் மூழ்கி டி.ஜி.பி. அலுவலக ஊழியரின் தந்தை மரணம்

சமயநல்லூர் அருகே டி.ஜி.பி. அலுவலக ஊழியரின் தந்தை கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார்.

மாலை மலர்

மதுரை:

டி.ஜி.பி. அலுவலக ஊழியரின் தந்தை கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பர்மா காலனியை சேர்ந்தவர் முருகன் (வயது33). இவர் சென்னையில் டி.ஜி.பி. அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை இருளாண்டி (வயது65). இவர் நேற்று சமயநல்லூர் கண்மாய் பகுதியில் நடந்து சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கண்மாய்க்குள் தடுமாறி விழுந்து விட்டார். ஆழமான பகுதியில் சிக்கி இருளாண்டி மூச்சுத்திணறி உயிரிழந்தார்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் சமயநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இருளாண்டியின் உடலை மீட்டு பிரேத பரிசேதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.