செய்திகள்

தேர்த் திருவிழாவில் சிக்கித் தவித்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா

கர்நாடகம் மாநிலத்தில் இன்று நடந்த தேர்த் திருவிழாவில் சிக்கி தவித்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா மற்றும் அவரது மனைவி ஆகியோரை பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.

மாலை மலர்

பெங்களூரு:

கர்நாடகம் மாநிலத்தில் ஹொலெநரசிபுரா பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ லஷ்மி நரசிம்மர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்த் திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த விழாவில் முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான தேவே கவுடா மற்றும் அவரது மனைவி சென்னம்மா, அவரது மகன் ரேவண்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தேர்த் திருவிழாவின் தொடக்கத்தில் தேரின் வடம் பிடித்து இழுக்கும்போது நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் தேவே கவுடாவும், அவரது மனைவியும் சிக்கிக் கொண்டனர்.

இதையறிந்த அவரது பாதுகாவலர்கள் அங்கு விரைந்து சென்று தேவே கவுடா மற்றும் அவரது மனைவியை பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து தேவே கவுடா கூறுகையில், இது ஒரு சாதாரண நிகழ்வுதான். யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார். தேவே கவுடா மற்றும் அவரது குடும்பத்தினர் எஸ்.பி.ஜி பாதுகாப்பு பிரிவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews