செய்திகள்

தேவதானப்பட்டி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட கும்பல் கைது

தேவதானப்பட்டி அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட கும்பலிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

தேவதானப்பட்டி:

தேவதானப்பட்டி அருகே உள்ள குள்ளப்புரத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த அவரது உறவினர் சிரஞ்சீவி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது.

இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதுகுறித்து சிரஞ்சீவி தன்னை தாக்கியதாக குருமூர்த்தி மீது புகார் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த குருமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீரபத்திரன், ராஜாத்தி, பழனிச்சாமி, பாப்பம்மாள், பாண்டி ஆகியோர் சிரஞ்சீவி தரப்பினை அரிவாளால் வெட்டினர்.

சிரஞ்சீவி ஜெயமங்கலம் போலீசில் புகார் செய்ததின் பேரில் போலீசார் குருமூர்த்தி உள்பட 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் குருமூர்த்தி தரப்பினர் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் சிரஞ்சீவி, அஜித்தை கைது செய்து மேலும் 6 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.