செய்திகள்

அரியானா கலவரத்தில் 30 பேர் பலி: டெல்லியில் 144 தடை உத்தரவு - அமைதி காக்குமாறு மோடி வேண்டுகோள்

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் குற்றவாளி என கைது செய்யப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் கலவரங்களில் ஈடுபட்டுள்ளதால் டெல்லியில் உள்ள 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

பாலியல் பலாத்கார வழக்கில் சாமியார் குர்மீத் ராம் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதை அடுத்து அரியானா, பஞ்சாப்பில் வன்முறை  வெடித்துள்ளது. அரியானா - பஞ்சாப் மாநில கலவரத்தில் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 250 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

கலவரக்காரர்கள் டெல்லியை நோக்கி முன்னேறி வரும் நிலையில் 11 மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

பஞ்ச்குலா வன்முறை சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அமைதி காக்க ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். மாநிலங்களில் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இயல்புநிலை திரும்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.