தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங். இவர் இரண்டு பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அவர் மீது 2002-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியது.
அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியில் உள்ள சி.பி.ஐ. நீதிமன்றத்தில் சுமார் 14 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
தீர்ப்பு வெளியானதும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலத்தில் ராம் ஹரிம் சிங்கின் ஆதரவார்கள் வன்முறையில் ஈடுபட்டனர். பொதுச் சொத்துக்களை தீயிட்டு கொழுத்தினார்கள். இந்த வன்முறையை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்ட வர முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. வன்முறைக்கு இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளனர்.