செய்திகள்

தமிழக பட்ஜெட் 8ம் தேதி தாக்கல்- சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு

தமிழக சட்டசபையில் வரும் 8-ம் தேதி பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்ய உள்ளார். #TNAssembly #TNBudget2019

மாலை மலர்

தமிழக சட்டசபை கடந்த மாதம் 2-ந் தேதி கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரை நிகழ்த்தினார். அதன்பின்பு 8-ந் தேதி சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 8-ம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும் என சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் இன்று அறிவித்துள்ளார். அன்றைய தினமே, 2019-2020-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.