செய்திகள்

டெங்கு காய்ச்சல் 10 நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் வரும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

டெங்கு காய்ச்சல் 10 நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

கோவை:

கேரள மாநிலத்தில் பாதிப்பை ஏற்படுத்திய டெங்கு காய்ச்சல் தற்போது தமிழகத்திலும் பரவி வருகிறது. ஜூலை மாதம் 23-ந்தேதி நிலவரப்படி தமிழகத்தில் 5013 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கன்னியாகுமரி, கோவை, ஈரோடு, சேலம், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ளது. சென்னையிலும் தற்போது டெங்கு அறிகுறிகளுடன் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

சென்னையில் போலீசார் 4 பேர் பாதிக்கப்பட்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பார்த்திபன், ஷிபு, சக்திவேல், யோகராஜ் ஆகியோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்த நிலையில், டெங்கு காய்ச்சல் 10 நாட்களுக்குள் முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சேலம் அரசு மருத்துவமனையில் மேற்பார்வை செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அரசு தரப்பில் பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.