வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை கலெக்டர் ராமன் ஆய்வு செய்து வருகிறார். கொசு உற்பத்தி இருந்தால் அபராதம் விதிக்கப்படுகிறது.
வேலூர் நேதாஜி மார்க்கெட், மண்டித்தெரு, சிட்டிங் பஜார், பழக்கடை பஜார், பகுதிகளில் கலெக்டர் ராமன் இன்று காலை டெங்கு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தார். அங்கு கொசு புழுக்கள் உற்பத்தி எதுவும் இல்லை.
இதனை தொடர்ந்து வேலூர் கண்டோன்மெண்ட் ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள தண்ணீர் தொட்டிகளில், ரெயில் நிலைய வளாகத்தில் ஆய்வு செய்தார். தண்டவாள பகுதியில் ஆய்வு செய்தபோது அங்கு அதிகளவில் டயர்கள் போடப்பட்டு தாறுமாறாக கிடந்தன.
அவற்றில் மழை நீர் தேங்கி கொசு புழுக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்த புதர் பகுதியிலும் கொசுபுழு உற்பத்தி இருந்தது. புதர்களை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.
மேலும் கொசு புழு உற்பத்திக்கு காரணமான டயர்களை அகற்ற கோரி ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்புமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தர விட்டார். அதன்படி
ரெயில்வே நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பபடுகிறது. ரெயில் நிலையத்தில் சுகாதார பணிகள் செய்யா விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.