செய்திகள்

டெங்கு காய்ச்சல் உயிரிழப்பை தமிழக அரசு மறைத்து பேசுகிறது: ஜி.கே.வாசன்

டெங்கு காய்ச்சலால் ஏற்பட்ட உயிரிழப்பை தமிழக அரசு மறைத்து பேசுவது வேதனை அளிக்கிறது என்று ஜி.கே.வாசன் கூறினார்.

மாலை மலர்

திருச்சி, அக். 15-

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் திருச்சியில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறிய தாவது:-

டெங்கு காய்ச்சல் காரண மாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. டெங்கு தொடர் பான அச்சமும், பீதியும் கிரா மங்கள் முதல் நகரங்கள் வரை பொதுமக்களிடம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் தமிழகத் திற்கு வருகை தந்துள்ள மத்திய குழுவினர் தமிழகத் தில் டெங்கு பாதிப்பு குறித்த உண்மை நிலையினை வெளிப் படுத்தாமலும், விழிப்பு ணர்வை ஏற்படுத்தாமலும் தமிழக அரசை பாதுகாப்பது போன்று பேசுவது எந்தவிதத் திலும் ஏற்புடையது அல்ல.

நேற்றும், இன்றும் கூட டெங்குவால் பாதித்தவர்கள் பல உயிரிழந்துள்ளதாக ஊட கங்கள் மூலம் பார்த்தேன். எனவே தமிழக அரசு விழித் துக்கொள்ள வேண்டும். சுகாதார பிரச்சினை உயிர் பிரச்சினை. இதில் 100 சத வீதம் கவனம் செலுத்தி மக் களுக்கு நம்பிக்கை தந்து, டெங்குவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.

டெங்கு காய்ச்சலால் உயிரி ழந்தவர்களின் குடும்பங்க ளுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் தரவேண்டும் என்று த.மா.கா. சார்பில் நான் ஏற் கனவே வலியுறுத்தி உள் ளேன். அவ்வாறு உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை சரியாகவும், முறையாகவும் கணக்கெடுக்கப்பட வேண் டும்.

ஆனால் டெங்கு காய்ச்ச லால் ஏற்பட்ட உயிரிழப்பை தமிழக அரசு மறைத்து பேசு வது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.