செய்திகள்

வாடிப்பட்டி அருகே டெங்கு காய்ச்சலுக்கு குழந்தை பலி

வாடிப்பட்டி அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை பரிதாபமாக இறந்தது.

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகேயுள்ள குலசேகரன் கோட்டை குட்டிகரடு பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் யஸ்வந்த் (வயது 2). கடந்த சில நாட்க ளுக்கு முன்பு யஸ்வந்த்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது.

உடனடியாக வாடிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு ரத்த மாதிரியை பரிசோதனை செய்ததில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

எனவே மேல் சிகிச்சைக்காக யஸ்வந்த்தை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி குழந்தை யஸ்வந்த் பரிதாபமாக இறந்தது.

இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.