செய்திகள்

கரூர் அருகே டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் புன்செய் புகளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் டெங்குகாய்ச்சல் தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்து அடிக்கும் முகாம் நடைப்பெற்றது.

வேலாயுதம்பாளையம்:

கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் உத்தரவின் பேரில் மாவட்ட சுகாதாரத்துறை துணைஇயக்குநர் நளினியின் ஆலோசனையின் படி பேரூராட்சிகளின் இணை இயக்குநர் இராஜேந்திரனின் பரிந்துரையின்பேரில் புன்செய் புகளுர் பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் டெங்குகாய்ச்சல் தடுப்பு மருந்து தெளித்தல் மற்றும் கொசு புகை மருந்து அடிக்கும் முகாம் நடைப்பெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள 600-க்கும் மேற்பட்ட வீட்டைசுற்றிலும் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள், தேவையற்ற பொருட்கள், டீ கப், உரல் பழைய டயர் ஆகியவற்றில் மழைநீர் தேங்கி நிற்பதை அகற்றப்பட்டது. மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் இருக்க நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நடமாடும் சுகாதார மருத்துவ குழுவினர் பொதுமக்களிடம் டெங்கு காய்ச்சல் பரவி உள்ளதா என்பது குறித்து பொது மக்களிடம் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் வழங்கினார்கள். மக்களுக்கு சுகாதாரத்துடன் இருப்பது குறித்தும், டெங்கு வராமல் தடுப்பது குறித்து உரிய ஆலோசனை வழங்கப்பட்டது. குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளில் குளோரின் பவுடர் போடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணசாமி மற்றும் அலுவலக பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.