விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி 
செய்திகள்

திருமாவளவன் பற்றி அவதூறு: நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

திருமாவளவன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அரூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். #VCK

அரூர்:

தருமபுரி மாவட்டம் அரூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார்.

தற்போது அந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அவதூறு பரப்பிய இளைஞரை கைது செய்யக்கோரி அரூர் கச்சேரிமேட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஜானகிராமன், சாக்கன்சர்மா, பாரதிராஜா, ராமச்சந்திரன், மூவேந்தன், சித்தார்த்தன், கேசவன் உள்பட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது அவதூறு பரப்பிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் சுமார் அரை மணி நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #VCK #thirumavalavan