ஓசூர்:
ஓசூர் ராம்நகர் அண்ணா சிலையருகே நடந்த ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் ஓசூர் நகர தலைவர் சவுத் அகமத் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஷபியுல்லா, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் முகம்மத் கலீல், முன்னாள் மாவட்ட தலைவர் ஏஜாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், கட்சியின் மாநில பேச்சாளர் மில்லத் அன்வர், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் ஷாநவாஸ், மாவட்ட பொதுச்செயலாளர் அஸ்கர் அலி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
மேலும் இதில் கட்சியினர் பலரும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஷப்பீர் அகமத் நன்றி கூறினார்.