கோப்புபடம் 
செய்திகள்

திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு - ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

திண்டுக்கல்:

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நேற்று திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாநில துணை செயலாளர் பாலசந்திரபோஸ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் விஷ்ணுவர்த்தன், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் நிருபன்பாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரெயில் வழித்தடங்களை தனியாருக்கு வழங்குவதை திரும்ப பெறவேண்டும். ரெயில்வே துறையை படிப்படியாக தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். ரெயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை அறிவித்து, அதில் இளைஞர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.