ராகுல் காந்தி 
செய்திகள்

ஜனநாயகத்துக்கும், நேர்மைக்கும், கர்நாடக மக்களுக்கும் ஏற்பட்ட தோல்வி - ராகுல் காந்தி

கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தோல்வி என தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கர்நாடகா சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்-மந்திரி குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அவருக்கு ஆதரவாக 99 வாக்குகளும், அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் 105 வாக்குகளும் கிடைத்தன. நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு கவிழ்ந்ததால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் அளித்த ராஜினாமா கடிதத்தை ஆளுநர் வுஜூபாய் வாலா ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில், கர்நாடகத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜனநாயகத்துக்கு ஏற்பட்ட தோல்வி என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், பேராசை வெற்றி பெற்றுள்ளது. இது ஜனநாயகத்துக்கும், நேர்மைக்கும், கர்நாடக மக்களுக்கும் ஏற்பட்ட தோல்வி என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT