உயிரிழப்பு 
செய்திகள்

பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீர் உயிரிழப்பு - கணவன் போலீசில் புகார்

நாகர்கோவிலில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட இளம்பெண் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நாகர்கோவில்:

சென்னை கூடுவாஞ்சேரி மாணிக்கபுரத்தைச் சேர்ந்தவர் வேலாயுத பெருமாள், (வயது 37).

குமரி மாவட்டம் ஆளுர் வீராணி பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா என்ற கோகிலா (வயது 26). இவர்கள் இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது. திவ்யா மீண்டும் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து பிரசவத்திற்காக தாயார் வீட்டிற்கு வந்திருந்தார்.

நாகர்கோவிலில் குழந்தை பிறந்த பிறகு திவ்யாவிற்கு ரத்தப்போக்கு அதிகமானதால் ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்த திவ்யா திடீரென பலியானார்.

திவ்யா பலியானது குறித்த தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வடசேரி போலீசில் அவரது கணவர் வேலாயுத பெருமாள் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் விசாரணை நடத்தி வருகிறார்.

திவ்யாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.