செய்திகள்

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு

டெல்லியில் பெண் பத்திரிகையாளர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி:

டெல்லி நொய்டாவை சேர்ந்தவர் மிதாலி சந்தோலா. செய்தி சேனல் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

வேலையை முடித்துவிட்டு நள்ளிரவு 12.30 மணிக்கு அவர் காரில் வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது முகமூடி அணிந்த 2 பேர் அவரது காரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவரது நெற்றியிலும், கைகளிலும் குண்டு பாய்ந்தது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். குடும்ப பிரச்சினை காரணமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT