டெல்லி போலீஸ் 
செய்திகள்

ஐஎஸ் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் 3 பேர் கைது - டெல்லி போலீஸ் அதிரடி

ஐ.எஸ். பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை டெல்லி போலீசார் இன்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

குடியரசு தினத்தை சீர்குலைக்கும் வகையில் வன்முறை சம்பவங்களை அரங்கேற்ற ஐ.எஸ். பயங்கரவாதிகள் இந்தியாவில் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் மாநில போலீசாரின் சிறப்பு காவல் படை இன்று சோதனையில் ஈடுபட்டது. அப்போது ஐ எஸ் பயங்கரவாதிகளாக சந்தேகிக்கப்படும் 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.