சத்யேந்தர் ஜெயின் 
செய்திகள்

மிகவும் ஆபத்தான நிலைக்கு சென்று திரும்பிய டெல்லி மந்திரிக்கு நெகட்டிவ்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலைக்குச் சென்ற டெல்லி மந்திரி சத்யேந்தர் ஜெயின் இன்று வீடு திரும்ப உள்ளார்.

டெல்லி மாநில சுகாதாரத்துறை மந்திரியாக இருந்தவர் சத்யேந்தர் ஜெயின். இவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 17-ந்தேதி அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று தாக்கியது உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்தது. ஆக்சிஜன் உதவி வழங்கப்பட்டது.

உடல்நிலை மிகவும் மோசமான காரணத்தினால் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டது. பிளாஸ்மா சிகிச்சையால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. கொரோனாவில் இருந்து விரைவாக மீண்டும். ஆக்சிஜன் உதவி தேவைப்படாததால் பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மீண்டும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் நெகட்டிவ் முடிவு வந்துள்ளது. இதனால் இன்று வீடு திரும்புகிறார்.

கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டதால் அவரது சுகாதாரத்துறை பொறுப்பை துணை முதல்வர் சேர்த்து கவனிக்கிறார்.