ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்கும் போது அதிகப்படியான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படும் போதும், பொருட்களுடன் சேர்த்து பிரச்சனைகளும் இலவச இணைப்பாக வருகிறது. அந்த வகையில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் முன்பதிவு செய்தவரும் பிரச்சனையில் சிக்கியுள்ளார்.
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசானில் புத்தம் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனனை டெல்லியை சேர்ந்த வாடிக்கையாளர் செப்டம்பர் 7-ம் தேதி முன்பதிவு செய்திருந்தார். தனது முன்பதிவு செப்டம்பர் 11-ம் தேதி விநியோகம் செய்யப்பட்ட நிலையில், ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு பதில் சோப்புகளை பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.
ஸ்மார்ட்போனிற்கு பதில் மூன்று சோப்பு கட்டிகள் விநோயகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிராக் தவான் அமேசானிடம் தெரிவித்த போதும் எவ்வித பதிலும் கிடைக்காத நிலையில், பிரச்சனையை பேஸ்புக்கில் பதிவிட்டார். பேஸ்புக்கில் இவரது போஸ்ட் வைரலானதைத் தொடர்ந்து அமேசான் சார்பில் வாடிக்கையாளருக்கு பதில் அளிக்கப்பட்டு பிரச்சனை தீர்க்கப்பட்டது.
இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஆஃப்லைன் சேனல்கள் மூலம் நேரடியாக விற்பனை செய்யப்படும் நிலையில், இவ்வாறான பிரச்சனை எழுந்திருக்கிறது. ஆன்லைனில் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்த பொருட்களுக்கு பதில் சோப்பு, மரக்கட்டை போன்ற பொருட்கள் விநியோகம் செய்யப்படும் நிகழ்வுகள் அதிகளவில் அரங்கேறியுள்ளது.
சிராக் தவான் பிரச்சனைக்கு அமேசான் சார்பில் பதில் வழங்கப்பட்டுள்ள போதிலும், விரைவில் அவர் முன்பதிவு செய்த ஸ்மார்ட்போன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக சிராக் தான் தெரிவித்துள்ளார். பிரச்சனை பேஸ்புக்கில் வைரலானதை தொடர்ந்து அமேசான் சார்பில் வேகமாக நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.