அடித்துக் கொலை 
செய்திகள்

20 ரூபாய்க்காக மகன் கண் முன்னே டெல்லிவாசியை அடித்துக்கொன்ற சலூன் கடைக்காரர்

ஷேவ் செய்தபின் 50 ரூபாய்க்குப் பதில் 30 ரூபாய் கொடுத்த நபரை சலூன் கடைக்காரர் தனது சகோதரருடன் அடித்துக் கொலை செய்த சம்பவம் டெல்லியில் நடைபெற்றுள்ளது.

மாலை மலர்

வடக்கு டெல்லி புராரி என்ற இடத்தில் ருபேஷ் என்பவர் 13 வயது மகன் மற்றும் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். இவர் அருகில் உள்ள முடிதிருத்தும் கடையில் சென்று ஷேவ் செய்துள்ளார். அப்போது கடைக்காரர் சந்தோஷ் 50 ரூபாய் கேட்க ருபேஷ் 30 ரூபாய் கொடுத்துள்ளார்.

20 ரூபாய்க்காக தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு அதிகரிக்க சந்தோஷ் தனது சகோதரர் உடன் இணைந்து ருபேஷை கடுமையாக தாக்கியுள்ளனர். அப்போது ருபேஷ் மகன் இருவரிடம் கெஞ்சியுள்ளார். இருந்தாலும் ருபேஷை பிளாஸ்டிக் பைப் கொண்டு கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த ருபேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 20 ரூபாய்க்காக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால், சண்டை நடைபெற்றபோது ருபேஷை யாரும் காப்பாற்ற முன் வராமல், செல்போனில் படம் எடுத்துள்ளனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து தெரியவர போலீசார் சந்தோஷ் மற்றும் அவரது சகோதரரை போலீசார் கைது செய்துள்ளனர்.