செய்திகள்

டெல்லி ஐகோர்ட்டில் இரட்டை இலை சின்னம் வழக்கு 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு தவிர்க்க இயலாத காரணங்களால் வருகிற 30-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் ஐகோர்ட்டு பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதிகள் ஜி.எஸ்.சிஸ்தானி, சங்கீதா திங்ரா சேகல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் தரப்பிலான வாதம் ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலான வாதம் இன்னும் நிறைவடையவில்லை.