செய்திகள்

டெல்லியில் துணிகரம் - நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை

தலைநகர் டெல்லியில் தலைமை காவலர் ராம் அவ்தார் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ShotDead

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். இவர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர்

சரமாரியாக சுட்டனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த திடீர் தாக்குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.

தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் தலைமை காவலர் ராம் அவ்தார் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தலைநகர் டெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ShotDead