புதுடெல்லி:
டெல்லி துவாரகா மாவட்ட கோர்ட் நீதிபதிகள் லஞ்ச ஊழலில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பான ஆதாரங்களும் டெல்லி ஐகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக சாட்டையை சுழற்றிய டெல்லி ஐகோர்ட், துவாரகா மாவட்ட கூடுதல் நீதிபதி ஜிதேந்தர் மிஷ்ரா, நவீன் அரோரா (சிறப்பு நீதிபதி, மின்சாரம்) ஆகியோரை இன்று பதவி நீக்கம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.