வாக்களித்துவிட்டு வெளியே வந்த ஆளுநர் அனில் பைஜால் 
செய்திகள்

டெல்லி சட்டசபை தேர்தல்- கிரேட்டர் கைலாஷ் வாக்குச்சாவடியில் வாக்களித்த ஆளுநர்

டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தன் மனைவி மாலா பைஜாலுடன் கிரேட்டர் கைலாஷில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் காலையிலேயே தங்கள் வாக்குச்சாவடிகளில் தங்கள் வாங்கை பதிவு செய்தனர். 

டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் தன் மனைவி மாலா பைஜாலுடன் கிரேட்டர் கைலாஷில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சவுரப் பரத்வாஜ், பாஜக சார்பில் ஷிகா ராய், காங்கிரஸ் சார்பில் சுக்பீர் பவார் ஆகியோர் களத்தில் உள்ளனர். 

மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன், தன் தாயாருடன் கிருஷ்ணா நகரில் உள்ள ரத்தன் தேவி பப்ளிக் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

மாலை  6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி, பாரதீய ஜனதா மற்றும் காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுகிறது. எனினும், ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. தேர்தலை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.