செய்திகள்

ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் வெற்றிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது டெல்லி டேர்டெவில்ஸ்

டெல்லி பெரோஸ் ஷா கோட்லாவில் நடைபெற்று வரும் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ்

சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சஞ்சு சாம்சன் 2 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 3 ரன்னில் வெளியேற, டெல்லி அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் முக்கிய இரண்டு விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.

3-வது விக்கெட்டுக்கு கருண் நாயருடன் ரிஷப் பந்த் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. ரிஷப் பந்த் 22 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த சாமுவேல்ஸ் 27 ரன்கள் சேர்த்தார்.

கருண் நாயர் 45 பந்தில் 9 பவுண்டரியுடன் 64 ரன்கள் அடித்து 19-வது ஓவரில் அவுட்டாக டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது.

SCROLL FOR NEXT