செய்திகள்

மத்திய முன்னாள் மந்திரிக்கு எதிராக பாலியல் புகார் - பெண் பத்திரிகையாளருக்கு டெல்லி கோர்ட் சம்மன்

மத்திய முன்னாள் மந்திரி எம்.ஜே. அக்பருக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்த பெண் பத்திரிகையாளர் பிரியா ரமணிக்கு டெல்லி கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. #metoo #MJAkbar #MJAkbardefamationsuit #journalistPriyaRamani

மாலை மலர்

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொந்தரவு தொடர்பான தகவல்களை “மீடூ” என்ற பெயரில் டுவிட்டர் இணைய தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா துறை பிரபலங்கள் என பலரும் இந்த “மீடூ” இந்தியா ஹேஷ்டேக் தகவல் பகிர்வுகளால் பாதிப்பு அடைந்தனர்.
 
அவ்வகையில், மீடூ பாலியல் குற்றச்சாட்டுக்கு மத்திய மந்திரி எம்.ஜே.அக்பரும் ஆளானார். பிரபல பத்திரிகையாளராக இருந்து பா.ஜனதாவில் இணைந்து மாநிலங்களவை எம்.பி. மற்றும் இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி  பொறுப்பில் இருந்த எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதனால் தனது மந்திரி பதவியை அவர் ராஜினாமா செய்ய நேரிட்டது.

இதைதொடர்ந்து, அக்பரின் சட்ட ஆலோசனை நிறுவனமான கரன்ஜாவாலா குழுமத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் புகார் கூறிய பெண் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிரியா ரமணி மீது டெல்லி கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கிரிமினல் சட்டப்பிரிவுகளின்கீழ் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தனர்.

எம்.ஜே.அக்பரின் வாக்குமூலத்தை பதிவு செய்துகொண்ட மாஜிஸ்திரேட் இவ்வழக்கின் மறுவிசாரணையை ஒத்திவைத்தார்.