செய்திகள்

டி.டி.வி. தினகரன், சுகேஷ் குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய அனுமதி அளித்தது டெல்லி கோர்ட்

தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், டி.டி.வி.தினகரன், சுகேஷ் சந்திரசேகர் ஆகியோரின் குரல் மாதிரிகளை ஆய்வு செய்ய டெல்லி கோர்ட் அனுமதி அளித்துள்ளது.

மாலை மலர்

இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் கமி‌ஷனுக்கு ரூ.50 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா அணி துணை பொதுச்செயலாளர் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், டி.டி.வி. தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா, ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்தனர். அவர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பது தொடர்பாக தினகரன்- சுகேஷ் இடையே நடந்த டெலிபோன் உரையாடல் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதனால் இந்த இருவரது குரல் மாதிரியை பரிசோதிக்க அனுமதிக்க கோரி போலீசார் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.


குரல் மாதிரி சோதனை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து டி.டி.வி.தினகரன், சுகேஷ் தாக்கல் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.