செய்திகள்

பீமா கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம்: கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

மகாராஷ்டிரா மாநிலத்தின் பீமா-கோரேகான் கலவரத்துக்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று மகாராஷ்டிரா மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள புல்தானா மாவட்டத்தின் சிந்துஹெத் பகுதியில் உள்ள மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் தாயார் ராஜமாதா ஜீஜாபாய் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்.

அதன்பின்னர் அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

புனேயில் பீமா-கோரேகான் பகுதியில் ஏற்பட்ட கலவரத்திற்கு பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம். ஜாதி மற்றும் மதரீதியாக கலவரங்களை ஏற்படுத்தி மக்களை பிரித்து வரும் பா.ஜ.க.வை வன்மையாக கண்டிக்கிறோம்.

மகாராஷ்டிரா மாநில அரசு பட்ஜெட்டில் 3 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் கல்வியின் தரம் மிகவும் மோசமாக பின்தங்கி உள்ளது. மேலும், இங்கு ஏராளமான அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ள அவலம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT