செய்திகள்

கனமழை எதிரொலி: டெல்லி, மும்பை விமானங்கள் தாமதம்

கனமழை காரணமாக டெல்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் தமிழகம் எங்கும் கனமழை கொட்டி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழைக்கு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, இன்று மாலை முதல் சென்னையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் அப்பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி, மும்பை மற்றும் திருவனந்தபுரம் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக டெல்லி, மும்பை, திருவனந்தபுரம் செல்லும் விமானங்கள் சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என தெரிவித்துள்ளனர்.