ராஜ்நாத் சிங் 
செய்திகள்

நாளை முதல் 3 நாட்கள் ராஜ்நாத் சிங் ர‌ஷியாவில் சுற்றுப்பயணம்

ர‌ஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் ஷாங்காய் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக நாளை ர‌ஷியா செல்கிறார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத் துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்கிறது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க ராஜ்நாத் சிங் நாளை முதல் 3 நாள் பயணமாக ரஷியா புறப்பட்டுச் செல்கிறார் என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவுடனான மோதலுக்கு மத்தியில் ராஜ்நாத் சிங்கின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.