காந்திநகர்:
பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் அகமதாபாத்தில் உள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் ‘நோ யுவர் ஏர் போர்ஸ்’ என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இளம் தலைமுறையினரிடையே விமானப்படை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பின்னர், ஜம்நகரில் உள்ள விமானப்படை நிலையத்திற்கு சென்று அங்குள்ள ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்களை அவர் பார்வையிட்டார். அதுகுறித்து வீரர்கள் மந்திரிக்கு விளக்கம் அளித்தனர்.
மேலும், சிறப்பு ஹெலிகாப்டரின் செயல்முறை குறித்து காமாண்டர்கள் அவருக்கு செய்து காட்டினர். அங்குள்ள போர் விமானங்களில் அமர்ந்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி மாணவர்கள் விமானப்படையில் சேர்வதற்கான ஆர்வத்தை தூண்டும் என்ற நோக்கத்தில் விமானப்படையினர் நடத்தியது குறிப்பிடத்தக்கது.