ஜெய்ப்பூர்:
இந்திய விமானப்படையில் அதிநவீன ‘சுகோய் 30 MKI’ ஜெட் ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. மணிக்கு சுமார் 2100 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து எதிரிகளின் இலக்குகளை குண்டுவீசி தாக்கி அழிக்கும் சுகோய் விமானங்கள் ரஷியாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.
இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் விமானப்படை தளத்தில் இருந்து ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ‘சுகோய் 30 MKI’ போர் விமானத்தில் பறந்து அதன் செயல்திறனை அறிந்து கொண்டார். #NirmalaSitharaman #Sukhoi30MKI #tamilnews