செவ்வாப்பேட்டை:
எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் பாடி காஸ்டிங் பாபு-பங்கஜம் தம்பதியின் மகள் சரண்யாவுக்கும், லட்சுமி காந்தன்-விஜயா தம்பதியின் மகன் விஜயராஜிக்கும் இன்று காலை திருமணம் அம்பத்தூரில் உள்ள கே.பி.எம். மகாலில் நடைபெற்றது.
முன்னதாக நேற்று மாலை திருமண வரவேற்பு நடந்தது. இதில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அவரை பாடி காஸ்டிங் பாபு, அவரது மனைவி பங்கஜம் பாபு, மகள் சிவரஞ்சனி, மருமகன் சுகுமார், மகன் ஹரிகரன், பேரன் மோனிஷ் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
பின்னர் ஜெ.தீபா நிருபர்களிடம் கூறியதாவது:-
நீட் தேர்வால் அனிதா உயிர் இழந்து இருப்பது கண்டிக்கத்தக்கது.
நீட் தேர்வு எதிராக போராடும் மாணவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பது தவறு. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பெரும்பான்மை இல்லாத எடப்பாடி அரசை உடனடியாக கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும். துணை முதல்வர் ஓ.பி.எஸ். நீட் தேர்விற்காக குரல் கொடுக்காதது கண்டிக்கத்தக்கது. வேதா இல்லத்தை மீட்க சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.