செய்திகள்

அண்ணா நகரில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

மதுரை அண்ணா நகரில் கடன் தொல்லையால் வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

மாலை மலர்

மதுரை:

மதுரை அண்ணாநகர் சதாசிவம் நகர், நேதாஜி தெருவைச் சேர்ந்தவர் செல்லக்கண்ணு (வயது 60), அரிசி வியாபாரி.

கடந்த சில நாட்களாக வியாபாரத்தில் தொய்வு ஏற்பட்டு கடன் தொல்லை உருவானது. இதனால் மனவேதனையில் இருந்த செல்லக்கண்ணு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்து மயங்கினார். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதேபோல் தெப்பக்குளம் அருகே ஐராவதநல்லூர் ஆர்ச் பகுதியில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி மயங்கிய நிலையில் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ரூபாதேவிக்கு தகவல் கிடைத்தது.

தெப்பக்குளம் போலீசார் மூதாட்டியை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தனது பெயர் பாத்திமா (70) என கூறிய மூதாட்டி அதன் பிறகு இறந்து விட்டார். அவர் எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என்பது குறித்து தெப்பக்குளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.