செய்திகள்

தர்மபுரி அருகே கடன் சுமையால் லாரி அதிபர் தற்கொலை

தர்மபுரி அருகே கடன் சுமையால் லாரி அதிபர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மாலை மலர்

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் தெள்ளன ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 50). லாரி அதிபர். இவர் 4 லாரிகளை வைத்து தொழில் செய்து வந்தார்.

லாரிகள் வாங்கியதிலும், அவற்றை பராமரித்ததிலும் சக்திவேலுக்கு கடன் ஏற்பட்டது. இதனால் ஒவ்வொரு லாரிகளாக விற்று கடன் தொகையை அடைத்து வந்தார். 4 லாரிகளை விற்ற பிறகும் கடனை முழுவதுமாக செலுத்த முடியவில்லை. கடன் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்தது.

கடன் பிரச்சினையால் விரக்தி அடைந்த சக்திவேல் நேற்று வீட்டில் பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சக்திவேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இவருக்கு சத்யசங்கரி என்ற மனைவியும் பிரவீனா என்ற மகளும், வெற்றிவேல் என்ற மகனும் உள்ளனர்.