செய்திகள்

குரங்கணி காட்டுத்தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்வு

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி 11 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மதுரையில் சிகிச்சை பெற்று வந்த திவ்யா விஸ்வநாதன் என்பவர் இன்று மரணமடைந்தார். #TheniFire

மதுரை:

தேனி மாவட்டம் குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ம் தேதி மாலை தீப்பிடித்தது. இந்த விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்திருந்த நிலையில், கோவையைச் சேர்ந்த திவ்யா விஸ்வநாதன் இன்று மரணமடைந்தார். இவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, மேற்கண்ட குரங்கணி தீ விபத்து சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் கொடுத்த ஏஜெண்ட் பிரபு என்பவர் ஈரோட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். #TheniFire 

SCROLL FOR NEXT