செய்திகள்

டிட்லி புயல், மழை, வெள்ளத்துக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவமாடிய டிட்லி புயலின் எதிரொலியாக பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக்கு பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. #Odishafloods #CycloneTitli

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

SCROLL FOR NEXT