ரஷியா நாட்டின் சைபிரியா மாகாணத்துக்குட்பட்ட தென்கிழக்கு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக இம்மாகாணத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
குறிப்பாக, இர்குட்ஸ்க் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போன சுமார் 20 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.