செய்திகள்

ஈராக் - திக்ரித் பகுதியில் கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

ஈராக்கின் திக்ரித் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Iraq #CarExplosion

டமாஸ்கஸ்:

ஈராக் நாட்டின் திக்ரித் பகுதியில் உள்ள உணவகம் அருகில் இன்று பயங்கரவாதிகள் கார் வெடிகுண்டு மூலம் தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியானார்கள். மேலும் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் அங்கு விரைந்து சென்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.