செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கு - 5 பேருக்கு தூக்குத்தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் விஷம் கலந்த சாராயம் குடித்து 13 பேர் உயிரிழந்த வழக்கில் 5 பேருக்கு மரணதண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. #poisonousdrink #tiruvannamalai #DeathPenalty

தமிழ்நாடு மாநிலம் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் கடந்த 2000-ம் ஆண்டு விஷம் கலந்த சாராயம் குடித்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் சாராயத்தில் விஷம் கலந்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். இது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.