தருமபுரி:
தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவரது மகன் மணிவண்ணன் (வயது25). இவர் கடந்த 23-ந் தேதி அன்று உடலில் தீக்காயம் ஏற்பட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மணிவண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து மாரண்ட அள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.